லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்தாரா சிவகார்த்திகேயன்.. பலவருட பகைக்கு இந்த நிகழ்ச்சி தான் காரணமா?

Report
90Shares

90களில் நடிகையாகவும் சமீப காலத்திற்கு முன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருந்தவர் நடிகை வட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் நடிகையாக பெயர் பெற்றதைவிட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தான் அதிக புகழ் பெற்றார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு தரப்பினரிடமும் கிண்டலடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வெற்றியைப் பகிர்ந்து கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதில் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளதாக தெரிகிறது.

சிலர் நிகழ்ச்சியை கிண்டலடிப்பதை விடுத்து என்னையும் மறைமுகமாகவும் தாக்கி பேசியுள்ளனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற தலைப்பில் பாடலை பாடி விட்டார். அதேபோல் லட்சுமி ராம கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்திருந்தார்.

உண்மையிலேயே முதல் முதலில் சினிமாவில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் குறள் 786 எனும் படத்தின் மூலம்தான் சிவகார்த்திகேயன் அறிமுகமாக இருந்தது. ஆனால் மெரீனா படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அந்த பாடலில் அப்படி கிண்டலடித்து நடித்ததற்காக தற்போது வரை அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என வருத்தப்படுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுபற்றி சிவகார்த்திகேயனை தான் திட்டுவதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள்.