நடன இயக்குநருடன் திருமணம் வரை சென்ற காதல்.. நடிகை நயன்தாராவை அசிங்கப்படுத்திய தொலைக்காட்சி..இதற்காகவா?

Report
296Shares

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாதூ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன் தாரா. சினிமாவீல் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே நயன்தாரா என்றாலே சர்ச்சை நாயகி தான் என்று பெயர் பெற்றார். அதிலும் காதல் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

திடீர் திடீரென காதல், தோல்வி வேறொருவர் காதல் என வந்து விடுவது தான் அவருக்கு உள்ள ஒரு வீக்னெஸ்.

அப்படித்தான் வல்லவன் படத்தின் போது சிம்பு மீதும், அதன்பிறகு வில்லுபடத்தின் போது பிரபுதேவா மீதும் காதல் ஏற்பட்டது.

நடன இயக்குநர் பிரபுதேவாவுடனான காதல் முற்றி திருமணம் வரை சென்றது.

அவருக்காக மதம் மாறி ஊர் சுற்றினார் நயன்தாரா. ஆனால் சிம்புவுடன் சம்பந்தபடுத்தி பழைய காதல் பற்றி பிரபுதேவா நயன்தாராவை இழிவுபடுத்தி பேசியதால் அவரை விட்டு விலகியதாக ஒரு செய்தி உள்ளது. அதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

நயன்தாரா - பிரபுதேவா சர்ச்சைக்கு பிறகு நயன்தாரா கொடுத்த பிரபல தொலைக்காட்சி சேனலில் கலந்து கொண்டுள்ளார். பேட்டியில் நயன் தாரா காதல் பற்றிய விஷயங்கள் பேசியுள்ளார். ஆனால் அந்த தொலைக்காட்சி சேனல் சொன்ன விஷயங்களை சிலவற்றை வேறு விதமாக மாற்றி விட்டு விட்டார்களாம். இதனால் நிறையவே அசிங்கப்பட்டு விட்டாராம் நயன்தாரா.

அதனால் இனி யாரையும் எந்த சேனலையும் நம்பி நான் பேட்டி கொடுக்க போவதில்லை என முடிவு எடுத்திருந்தார். சமீபகாலமாக விக்னேஷ் சிவனை காதலிப்பதால் சந்தோஷமாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய முகத்தை காட்டி வருகிறார்.

தற்போது அதை மறந்து மீண்டும் படத்திற்காகவும் தனக்கான ப்ரோமோஷனிற்கு தொலைக்காட்சிகளில் தலையை காட்டி வருகிறார் நயன்தாரா.