தன் வருங்கால கணவரை ஹீல்ஸ் போட்டு பார்க்க வேண்டும்.. நடிகை ரகுலின் ஆசையை திருப்தி படுத்தபோவது யார்?

Report
32Shares

தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிட்த்து பிரபலமானார். தற்போது உலகநாயகனின் இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுன் என்பதால் இணையம் வழியாக பேட்டிகளை கொடுத்து வருகிறார் ரகுல். தன்னுடைய வருங்கால காதல் கணவன் குறித்து பேட்டியளித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

திருமணம் காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அது மிக அழகானது. ஒருவரை நாம் காதலிக்கும் போது முழுமனதுடன் காதலிக்க வேண்டும் நான் அப்படிப்பட்ட பொண்ணுதான் என்று கூறியுள்ளார்.

மேலும் வருங்கால கணவன் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுவது.

ஓர் ஆணிடம் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் உயரமாக உடலை பெற்றிருக்க வேண்டும். நான் ஹீல்ஸ் போட்டாலும் அவரை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். புத்திசாலித்தனத்துடன் வாழ்க்கையில் ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையில் எனது கணவன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பொருத்தமாக இருப்பவர் யார் என்று வரும் காலத்தில் தான் தெரியும். தன் திருமணம் செய்யபோகும் மாப்பிள்ளை பார்ப்பதை ரகுல் அவரது பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டார் என்று ரகுலின் தாயார் கூறியிருந்தார்.