மார்ஃபிங் செய்து க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டாரா நடிகை த்ரிஷா?.. எச்சரிக்கை செய்த மீராமிதுன்..

Report
1628Shares

தென்னிந்திய சீனிமாவில் கனவுக்கன்னியாக தற்போது வரையில் வேறு யாருக்கும் கொடுக்காதவர் நடிகை த்ரிஷா. சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா கடந்த ஒரு மாத காலமாக சமூக வலைத்தளங்களில் தலையிடாமல் இருந்தர்.

தற்போது மீண்டும் இணையத்திற்கு வந்த திரிஷா முதல் நாளே ஒரு க்ளாமரான புகைப்படத்தினை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்களும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிக்பாஸ் மீராமிதுன்.

தற்போது பட ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் அனைத்து நடிகர் நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தங்களுடைய புகைப்படங்களையும் ரசிகர்களுடன் உரையாடல் என பொழுதை கழித்து வருகின்றனர்.

த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்த மீரா மிதுன், திரிஷா தன்னுடைய போஸை காப்பியடிப்பதாக தெரிவித்தார். மேலும் இப்படி காப்பியடித்து பெயர் எடுக்க வேண்டாம் என திரிஷாவை எச்சரித்துள்ளார். இது ரசிகர்களை செமையாக கோபப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மீராமிதுன் நடவடிக்கைகள் எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்காத நிலையில் இப்படி ஒரு பதிவினை போட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் என்னை வளரவிடாமல் தடுக்கிறார்கள் என்று புகாரளித்துள்ளார் மீராமிதுன்.