புற்றுநோயால் 29 வயதிலேயே உயிரைவிட்ட தொலைக்காட்சி நடிகை.. மரணத்தை முன்பே அறிந்து உருக்கமாக பதிவிட்ட சோகம்..

Report
226Shares

பாலிவுட் சினிமாவில் பிரபல நிறுவனம் வெளியிட்ட ட்ரூ லைஃப் என்ற வெப்சீரியஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார் திவ்யா சௌக்சி. இதற்கு முன் மாடலிங்கில் இருந்து யுகேவில் நடைபெற்ற மிஸ் இந்தியா யுகே என்ற போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்பாக இடம் பிடித்தார்.

இதற்கு பிறகு Hai Apna Dil Toh Awara என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பிருந்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தீவிரசிகிச்சை பலனின்றி கடந்த வாரம் மரணமடைந்துள்ளார். மரணம் குறித்து முன்பே அறிந்து கொண்டிருந்த நடிகை திவ்யா ”நான் ,மரண படுக்கையில் இருக்கிறேன். உறுதியாக இருக்கிறேன். ஆனால் வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும்” என்று உருக்கமாகவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

29 வயதான நிலையில் நடிகை திவ்யா சௌக்சி மரணமடைந்துள்ளார். இதை கேள்விப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவிட்த்து வருகிறார்கள்.