விஜய் படங்கள் என்றாலே வேண்டாம் என கூறும் சூர்யா மனைவி ஜோதிகா.. இதுதான் காரணம்?..

Report
3213Shares

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி நடிகர் சூரியாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், கமல், விக்ரம், போன்றவர்களோடு நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து 2006ல் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளை பெற்றார்.

தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் நீண்ட நாளாக நடிக்காமல் இருக்க என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் மெர்சல் படத்தில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா தான் முதலில் பேசப்பட்டது.

இந்த வாய்ப்பினை அவர் வேண்டாம் என்று ஒதுங்கினார். இதற்கு காரணம் விஜய் ஜோதிகாவிடையெ இருந்த ஈகோ தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது கிடையாது என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் கால்ஹீட்டின் போது குடும்பத்தில் சில பிரச்சனை இருந்ததால் தான் நான் வேண்டாம் என்று கூறினேன்.

அதன்பின் அந்த பிரச்சனை முடிந்ததும் மற்ற படங்கள் வெளிவந்தன. இதுதான் காரணம் மற்றபடி ஊடகங்களில் வெளியாகும் வதந்திகள் பொய் என்று கூறியுள்ளார்.