நயன்தாராவின் முன்னாள் காதலனை திருமணம் செய்தாரா நடிகை திரிஷா?..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகரின் பெற்றோர்...

Report
153Shares

தென்னிந்திய கனவுகன்னியாக தற்போது வரையிலும் இருந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த 96 படத்தில் நான் வயதானவள் இல்லை என்று கூறி படவாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

சினிமாவில் பல கிசுகிசுக்கள் அனைவருக்கும் சகஜமான ஒன்று தான். அந்தவகையில் நடிகை திரிஷாவும் பல வதந்திகளில் சிக்கினார். நடிகர் ராணாவுடன் டேட்டிங். தொழிலதிபருடனான நிச்சயதார்த்தம் என்று பரபரப்பையும் கிளப்பினார்.

தற்போது 37 வயதாகியும் சினிமாவில் நடித்திருக்கும் திரிஷா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.

அதேசமயம் நடிகர் சிம்பு நடிகராக வளர்ந்து வரும்போது நடித்த படம் தான் வல்லவன். அப்படத்தில் நடிகை நயன் தாராவுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்தார். அதேசமயம் நடிகை ஹன்சிகாவுடனும் காதல் என்று சர்ச்சையான நடிகர் என்ற பெயரும் பெற்றார்.

இதற்கிடையில் சிம்புவுன் திரிஷாவும் இணைந்து வின்னைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் இணைந்து நடித்து நண்பர்களாகினர்.

இந்நிலையில் இருவரும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்யபோவதாகும், கூடிய சீக்கிரமே கல்யாணம் என்றும் இணையத்தில் கண்டபடி வதந்தி செய்திகள் பரவியது.

இதுவெறும் வதந்தியே என்று நடிகர் சிம்புவின் பெற்றோர்கள் ஊடகத்திற்கு பேட்டியளித்து கூறியுள்ளனர். எங்களின் மூத்தம் குறித்து பல சர்ச்சையான செய்திகள் பரவி வருகிறது. அவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் திருமணம் என்றெல்லாம் நடக்கவில்லை.

நடிகை திரிஷா - சிம்பு இடையே நல்ல நண்புள்ளது. அது காதலாக இருந்தால் உலகிற்கு அதிகாரபூர்வமாக கூறுவோம் என்று கூறியுள்ளார்கள்.