15 வருடகால சினிமாவில் இருந்து விலகுகிறாரா அனுஷ்கா?.

Report
68Shares

தமிழ் சினிமாவில் ஷீல்ட் நடிகை என்று பெயர் பெரும் அளவிற்கு கடினமான கதைகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்தும் முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக இவர் தான் என்று போட்டிபோடும் அளவிற்கு இருந்து வருகிறார் அனுஷ்கா செட்டி.

சமீபகாலமாக சரித்திரம், பிரமாண்டம், வரலாற்று படங்களிலேயே நடித்தும் புகழ்பெற்றார். இவர் சினிமாத்துறையில் முதன் முதலில் நடித்த படம் சூப்பர். இப்படம் 2005 ஜூலை 22ல் வெளியாகி நடிகை அனுஷ்காவின் கரியரை துவக்கிய படமாக அமைந்தது.

இதையடுத்து தான் தமிழில் சிங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது சூப்பர் படத்தின் 15வது வருடத்தை இன்று அப்படத்தின் குழு கொண்டாடியுள்ளனர். அதேபோல் நடிகை அனுஷ்காவின் 15 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடியுள்ளார்.

தற்போது இணையத்தில் #15YearsofAnushkaShetty என்று ஹாஷ்டேக் மூலம் டிவிட்டர் பக்கத்தில் டிரெண்ட்டானது. ஆனால் ஒருசிலரோ இதை நடிகை அனுஷ்கா சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விலகுகிறார் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இந்நாள் வரை என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று தான் குறிப்பிட்டுள்ளார் அனுஷ்கா. இதுபோல் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.