வயதுக்குமீறி 45 வயதில் பெல்லி நடனமாடிய பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோவை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்!..

Report
1175Shares

கொரானா லாக்டனால் உலக மக்கள் கஷ்டப்பட்டு அன்றாட வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டும் வரும் சூழல் நிலவி வருகிறது.

சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெல்லி நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது 45 வயதாகும் நடிகை பிரகதி சமூகவலைத்தளத்தில் இளம் நடிகை போன்று புகைப்படங்களையும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.