செல்வராகவனை தொடர்ந்து இரண்டாம் திருமணம் செய்து கொள்ளபோகும் நடிகை சோனியா அகர்வால்?..

Report
628Shares

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை கண்டு பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இதையடுத்து கோவில், 7ஜி ரெய்ன்போ காலனி, புதுபேட்டை போன்ற வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

2006 இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளே நீடித்த திருமண வாழ்க்கை 2010ல் இருவரும் சமரசமாக கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சோனியா அகர்வால் வானம் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது லாக்டவுன் என்பதால் இணையத்தளத்திற்கு பேட்டியளித்தும் சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் இன்னும் 2 நாட்களில் என்று ஒரு வீடியோவில் தாலிகட்டுவது போன்ற காட்சி அமைந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஒருசிலர் இது சீரியல் அல்லது வெப்சீர்ஸ் படமாக இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.