தன்னைவிட 38 வயது அதிகமான கமல்ஹாசனுடன் ரொமான்சில் நடிகை கீர்த்தி?..ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
595Shares

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனை இயக்குநர் கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஊரடங்கு முடுந்த பின் கமல்ஹாசன் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் படங்களை முடித்துவிட்டு வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் 65 வயதை தாண்டிய கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது 40 வயதை நெருங்கிய நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே ரஜினியின் படத்தில் நடித்ததையறிந்து இப்படத்தில் கமிட்டாக்கலாம் என்று நினைத்தனர்.

ஆனால், தற்போது 27 வயதே ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகும் என்று கூடிய சீக்கிரமெ தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.