தன்இன்பத்திற்காக வளர்த்தவர்களை பகைக்கும் கங்கனா நயவஞ்சகி...கடுமையாக விமர்சித்த ஜோதிகாவின் அக்கா நக்மா..

Report
1472Shares

கடந்த மாதம் இந்தியாவையே அதிரவைத்த நிகழ்வு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை. தற்கொலை பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பலர் பலவிதமாக கூறி வருகிறார்கள். இதில் வாரிசு அரசியல் மிகவும் அதிகமாக அதிக்கத்தை ஏற்படுத்தியது தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்று கரண் ஜோஹர், சல்மான் கான், ஆலியாபட், மகேஷ்பட் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

இதற்கு நடிகை கங்கனா தன் சுயசுகத்திற்காக தான் நெபோடிசம் பேசி வருகிறார் என்று நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா விமர்சித்துள்ளார்.

கங்கனா யாரை குற்றம் சாட்டி வருகிறாரோ அவர்களால் தான் சினிமாவில் இந்த இடத்தில் இருக்கிறார். சினிமாவில் அவர் காதலித்து வந்த ஆதித்யா பஞ்சோலி தான் இயக்குநர் அனுராக்கிடம் அறிமுகப்படுத்தி கேங்ஸ்டர் படத்தில் நடிகையாக்கியது. அப்படத்தின் தயாரிப்பாளர் தான் மகேஷ் பட்.

அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகர் இம்ரான் ஹோஸ்மி. கங்கனாவிற்கு மார்க்கெட் குறைந்தபோது கைட்ஸ், க்ரிஷ் 2 படத்தின் மூலம் உதவியது ஹிரித்திக் ரோஷன். தற்போது கங்கனாவின் மேனேஜராக இருப்பதும் ஹிரித்திக்கின் சகோதரி ரங்கோலி. இதெல்லாம் நெபோடிசமாக தெரியவில்லையா?.

மேலும் சுஷாந்தின் தற்கொலைக்கு முன்பு அவரின் பேசியதோ, அவருக்கு உதவாத கங்கனா தனது சொந்த காரணத்திற்காக இப்படி பலரை விமர்சித்து பேசுவது ஏன் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் கங்கனா தீதி ஒரு நயவஞ்சகி என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி கங்கனா நக்மாவின் விமர்சனத்திற்கு சமுகவலைத்தளத்தில் அவரது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.