பிக்பாஸ் நடிகையை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய விஜய் பட நடிகர்... வைரலாகும் பதிவு..

Report
111Shares

கொரானா லாக்டவுன் என்பதால் தனிமையில் மக்கள் இருந்து வருவதால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறி வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து மர்மமாக இருந்து கிடந்தார்.

இதையடுத்து பல பிரபலங்களின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்து வருகிறது. அந்தவகையில் கன்னட சினிமாவில் பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா.

நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்று பிரபலமானார். இதையடுத்து சில நாட்களாக நான் மன உளைச்சளில் இருந்து வருகிறேன்.ன் இவ்வுலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்று அவரது முகநூலில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஆறுதல் கூறிவந்தனர். இதையடுத்து வீட்டிலேயே தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. சில நிமிடங்களிலேயே அந்த முகநூல் பக்க பதிவினை டெலிட் செய்துள்ளார் ஜெயஸ்ரீ.

பின் மற்றொரு பதிவில் நடிகர் சுதீப் அவர்களுக்கு நன்றி. உங்கள் குழுவினர்தான் என்னை காப்பாற்றினர் என்று ரசிகர்களை பயமுறுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.