பொது இடத்தில் கீர்த்தி சுரேஷிடம் சில்மிஷம் செய்த இளைஞர்.. தூக்கமில்லாமல் இருக்கும் நிலை? - மனம் திறந்த நடிகை..!

Report
213Shares

சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் பிரபலமாகி முன்னணி நடிகையாக வளர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது வளர்ச்சி பல முன்னணி நடிகைகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வாரிசு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய மைல்கல்லை எட்டி வருகிறார் கீர்த்தி.

இதையடுத்து தமிழில் தளபதி விஜய்யுடன் ஜோடி போட பல நடிகைகள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வந்த புதிதிலேயே இரண்டு படங்களில் ஜோடி போட்டு அசத்தினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அண்மையில் பெண்குயின் என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானது. எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கீர்த்தி சுரேஷ் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படத்திலும் இணைந்தி வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு ஒரு முறை நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் திடீரென முன்னால் வந்த நபர் ஒருவர் திடீரென அழகான போட்டோ ஆல்பத்தையும் கடிதத்தையும் கொடுத்திருக்கிறார்.

அதை பிரித்து பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட கீர்த்தி அப்படியே அமைதியாக விட்டுவிட்டாராம். அந்த கடிதத்தில், அந்த நபர் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா..? என எழுதியிருந்தாராம்.

யாரென தெரியாத நபர் இப்படியான ஒரு கடிதத்தை கொடுத்த இந்த தருணத்தை வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளது. திடீரென்று தன் முன் தோன்றி இந்த மாதிரி செய்து அந்த நபரை என்னால் மறக்க முடியவில்லை என்றும், அந்த இரவு தனது தூக்கமே வரவில்லை எனவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.