அஜித்தின் முதல் காதலி இவர்தானா?.. காதல் முற்றி பெண் கேட்க சென்ற இடத்தில் அசிங்கப்படுத்திய நடிகையின் பெற்றோர்.

Report
4952Shares

காதல் திருமணம் என்று பெண் கேட்க சென்ற இடத்தில் அசிங்கப்படுத்திய நடிகையின் பெற்றோர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகா இருந்து பல கஷ்டங்களை தாண்டி தன் கனவிற்காக உழைத்து முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பகால கட்டத்தில் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் மைல் கல்லை தொட்டுள்ளார்.

இதற்கிடையில் பல விமர்சனங்களும் கிசுகிசுக்களும் அவரை பற்றி பரவியது. இவர் நடித்த சில நடிகைகளை காதலித்து அதிலிருந்து விடுபட்டும் வந்துள்ளார். உயிருக்குயிராய் நடிகை ஹீராவை காதலித்தும் வந்தார். சில காரணங்களால் பிரிந்துள்ளார்.

ஆனால் ஹீராவிற்கு முன்பு 1996ல் வெளியான வான்மதி படத்தில் நடித்திருந்த போது நடிகை சுவாதி என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் திருமணம் வரை சென்றது. அதற்காக சுவாதி வீட்டிற்கு பெண் கேட்க சென்றுள்ளார் நடிகர் அஜித். அப்போது தன் மகளுக்கு தற்போது திருமணம் செய்ய விரும்பவில்லை என்று அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார்கள்.

இதற்கு என்ன காரணம் என்று விரிவாக தெரியவில்லை. இதையடுத்து 2000ல் அமர்களம் படத்திற்கு பிறகு ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் அஜித் குமார். சமீபத்தில் சுவாதி பேட்டியொன்றில் காதல் பற்றி எதுபற்றியும் கூறாமல் அஜித்தின் நல்ல மனதை பற்றி கூறியுள்ளார்.