சம்பளத்தை நடிகர்கள் முடிவு செய்வதில்லை.. வாரிசு ஆதிக்கம் சொல்வது தவறு.. நடிகர் பிரகாஷ் ராஜ்

Report
24Shares

கொரானா லாக்டவுனால் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மட்டும் சில விதிமுறைகளோடு அனுமதியளித்துள்ளது அரசு. ஆனால் சினிமாத்துறையே முடங்கி இருக்கும் நிலையில் பிரபலங்கள் பலர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வீட்டிலேயே நாட்களை கழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது சொந்த ஊரில் குடும்பத்துடன் செடி கொடிகளை பார்த்து வளர்ந்து வருகிறார். சில விடுப்பட்ட நேரங்களில் பேட்டியும் கொடுத்து வருகிறார். அப்போது நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருவதை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் நடித்த படங்களில் வியாபாரத்தை கணக்கில் வைத்தே சம்பளம் கொடுக்கிறார்கள். படம் வியாபாரம் ஆகவில்லை என்றால் அதிக சம்பளம் கொடுப்பது இல்லை.

கதாநாயகனின் மார்க்கெட்டை மனதில் வைத்து தயாரிப்பாளர்களே சம்பளத்தை முடிவு செய்கிறார்கள். யாரும் அதிக சம்பளம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை. ரசிகர்களும் பெரிய நடிகர்கள் படங்களைத்தான் பார்ப்போம் என்ற மனநிலையில் இருந்து மாறி புதிய நடிகர்களை வரவேற்க வேண்டும்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதாக பேசுகிறார்கள். வாரிசு நடிகர்கள் திறமையும் உழைப்பும் இல்லாமல் முன்னுக்கு வர முடியாது.

திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். எனவே வாரிசு ஆதிக்கம் என்ற விமர்சனங்கள் தவறானது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.