திருமணமாகாமல் குடும்பம் நடத்திய நடிகரின் காதலி.. 71 வயது தயாரிப்பாளருடன் தொடர்புதான் தற்கொலைக்கு காரணமா?

Report
92Shares

கடந்த ஒரு மாத காலமாக கொரானா வைரஸை தாண்டி இந்தியாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை. 34 வயதே ஆன சுஷாந்த் கடந்த ஜூன் 14ல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் மன அழுத்தத்தால் சில காலமாக இருந்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

தற்கொலையா? கொலையா என்று மும்பை போலிசார் பலரின் வாக்குமூலம் கொடுத்ததன் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அதற்கு காரணம் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தான் காரணம் என்றும் சில பிரபலங்களின் பெயரை வைத்து செய்தி வெளியாகி வருகிறார்.

தற்கொலை சம்பந்தமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் ரியா சகரபர்த்தி என்பவர் மீது புகார் அளித்துள்ளார். தற்கொலைக்கு தூண்டுதல், தவறான வழிநடத்துதல் கட்டுப்பாடு, பண மோசடி, நம்பிக்கை மீறிய செயல் என பல பிரிவின் கீழ் ரியா சகரபர்த்தி மீது வழக்கு கொடுத்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் அப்பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலித்து கொண்டே பிரபல தயாரிப்பாளர் 71 வயதான மகேஷ் பட்டுடன் தொடர்பிலும் இருந்து வருகிறார். சுஷாந்த் உயிருடன் இருந்தபோதே 15 கோடி பணத்தை அவரது கணக்கில் மாற்றியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளார் ரியா.

மன உளைச்சலில் இருந்த என் மகனை இதுபற்றி வெளியில் கூறிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதற்காக சில மாத்திரைகளை அதிகமாக கொடுத்துள்ளார் ரியா.

இதுபற்றி ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களிடம் வாக்குமூலம் பெற்றி பதிவு செய்தனர் போலிசார்.

அதில் ரியா சக்ரபர்த்தி கூறியதாவது, ‘ நானும் சுஷாந்த் சிங்கும் ஓராண்டு காலமாக ஒரே வீட்டில் இருந்து லிவ்விங் டூ கெதர் வார்க்கையை வாழ்ந்து வந்துள்ளோம். கடந்த ஜூன் 8 வரையில் நான் அவருடன் இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் விவகாரம் தொடர்பாக எனக்கு கொலை மிரட்டல்களும் பாலியல் மிரட்டல்களும் வருவதாக கூறியுள்ளார். இதனால் அதுதொடர்பாக மனு தாக்கலும் செய்துள்ளார் ரியா சக்ரபர்த்தி. சுஷாந்தின் தந்தை ரியா தொடர்ந்த வழக்கில் என்னை விசாரிக்க போலிசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.