90களில் விஜய் இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா?.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்?

Report
2477Shares

இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை தொட பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் 90களிலும் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சங்கவி.

இவர் மீண்டும் கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள்.

அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாக கூறியுள்ளனர். இதுபற்றி சங்கவி மறுத்துள்ளார். அப்படியாக நாங்கள் பழகவில்லை நல்ல மனிதர் விஜய் என்று கூறியு இருந்தார். அதன்பின் மாஸ் படங்களில் நடித்ததால் சங்கவியுடன் நடிக்க மறுத்துள்ளார் விஜய்.

இந்நிலையில் நடிகை சங்கவி ஒரு பேட்டியில் விஜய் குறித்தும் சினிமா அனுபவங்களை குறித்தும் பேசியுள்ளார்.

ரசிகன் படத்தில் முதன்முதலாக ஆடையில் மாற்றம் கொண்டு மோசமாக நடிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து அப்படம் பெரும் வெற்றியை கொடுத்ததால் ஆடையில் இன்னும் மாற்றம் கொண்டு வந்து அந்த மாதிரியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இதற்காகவே விஜய் படங்களில் நடிக்க காரணமாக இருந்தது. மேலும் பேசுகையில் ‘விஜய் படப்பிடிப்பில் யாருடனுமே பேசமாட்டார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவ்வளவு அமைதியாக இருப்பார் என்று தோன்றும். நம்மிடம் மட்டும் தான் இப்படி அமைதியாக இருப்பார்.

ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவர் அடிக்கும் அட்ராசிட்டிக்கு அளவே இருக்காது’ என கூறியுள்ளார்.

விஜய்யை எப்பவதாவது ரீயூனியன் சந்திப்பிலும் பார்ப்பேன். ஆனால் அஜித்தை தான் பார்க்கவே முடியவில்லை என்று கூறினார். கடந்த மே மாதம் தான் சங்கவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.