சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்பட்டு செம்ம பல்ப் வாங்கிய தல அஜித்?.. இதுதான் உண்மையா?

Report
1125Shares

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்ற பெருமை சேர்ந்தவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாக படங்கள் பெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

அஜித்தின் மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்ற படம் பில்லா. ஓவர்சீஸில் அஜித்தின் மார்க்கெட் உயர இந்த படம் மிகப்பெரும் காரணம். இதை தொடர்ந்து தல இனி வேற ரேஞ்சு என நினைக்க, ஏகன், அசல் என மீண்டும் சொதப்பினார்.

இதற்கிடையில் ஆஞ்சநேயா படம் வெளியாவதற்கு முன் நடிகர் அஜித் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. அதை ஒரு தொலைக்காட்சி நேரலையிலும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அஜித் எந்த இடத்திலும் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியது இல்லை. அந்த இடத்திற்கு தான் வருவேன் என்றார், அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த படியாக நான் வந்துவிடுவேன் என்று தயாரிப்பாளர் தேனப்பனிடம் கூறியுள்ளார்.

அதை ஒரு சில பத்திரிக்கைகள் பூதாகரமாக்க பெரிய பிரச்சனையில் அஜித் சிக்கி, ஆஞ்சநேயா படம் வெளிவந்தது. படம் படுதோல்வியடைய அஜித் மார்க்கெட் கிட்டத்தட்ட பாதாளத்துக்கு சென்றது.