இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை!!.. பாதியிலேயே விட்டுச்சென்று மறுமணம் செய்த கணவரால் போலிசில் தஞ்சம்..

Report
1895Shares

கொரானா லாக்டவுன் என்பதால் சினிமா வட்டாரத்தில் பல பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. வேலையில் தான் பிரச்சனையாக இருக்கும் என்று பார்த்த பிரபலங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலபிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகையின் கணவர் அவரைவிட்டுவிட்டு மறுமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ஈரமான ரோஜாவே. இதில் கதாநாயகியின் மூன்றாம் தங்கையாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷீலா.

சீரியல் மட்டுமல்லாமல் கண்ணே கலைமானே, அடித்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை திருமணம் செய்து இரு குழ்ந்தைகளுடன் செட்டிலானார். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து எடப்பாடியை சேர்ந்த செளந்தர் ராஜன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

சமீப காலமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கொரானா லாக்டவுன் என்பதால் இரண்டாம் கணவர் செளந்தர் ராஜன் மறுமணம் செய்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட ஷீலா செளந்தர் ராஜன் மீது போலிசாரிடம் சென்று புகாரளித்துள்ளார்.