அண்ணாத்தே படத்திற்கு பிறகு சினிமா வேண்டாம் என முடிவெடுத்தாரா கீர்த்தி?.. திருமணம் தான் காரணமா!!

Report
230Shares

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதன்பின் தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அண்ணாத்த படத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்து வருகிறார்

மேலும் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் கூடிய விரைவில் படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுலும் வரலாற்று படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க போவதாக கூறப்பட்டு வரும் வேட்டையாடு விளையாடு படத்தில் கூட கீர்த்தி தான் கதாநாயகி என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கலாம்.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் விரைவில் ஒருவரை திருமணம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது முற்றிலும் வதந்தி என கீர்த்தி தரப்பில் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் ஈடுபாடு கிடையாது என்றும் சினிமாவில் தான் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது திருமணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் கசியத்துவங்கியுள்ளது.

இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.