விழா மேடையில் கண்கலங்கினாரா சத்யராஜ்?.. வருத்தப்பட்ட நடிகை.. வைரலாகும் வீடியோ

Report
26Shares

சினிமா பிரபலங்கள் என்றாலே எது செய்தாலும் ஒரு செய்தியாக வெளியே பரபரப்பாக பேசப்படும். அதிலும் அழுவது போன்ற நிலையை வைரலாக்கி விடுவார்கள். அந்தவகையில் தனக்கு ஊடகத்தால் ஏற்பட்ட காமெடியை நடிகர் சத்யராஜ் ஒரு மேடையில் பகிர்ந்துள்ளார்.

தற்போது யுடியூப் சேனல்கள் பலர் சிறிய விஷயத்தை பெரிதாக காட்டுவதை போன்று, பேரை சொல்லி இருக்க மாட்டோம், மரண கலாய் என்று எழுதி விடுவார்கள்.

அதேபோல் கனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ் தனக்கு நடந்த காமெடியை பற்றி நகைச்சுவையாக பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சிக்காக மேடையில் பேசும் போது கண்ணில் இருந்து தண்ணீர் வந்தது.

அது என் கண்ணில் சாதாரணமாக தண்ணி வருவது வழக்கமான ஒன்றுதான். இதை பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சத்யராஜ் சாரை பார்த்து என் அப்பா நியாபகம் வந்தது என்று உருக்கமாக பேசினார்.

இதை பார்த்து எனக்கு அழுகாச்சியே வரவில்லை நான் அவ்வளவு செண்டிமெண்ட் கேரக்டர் கிடையாது என்று காமெடியாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.