2 ஆண்டுகளாக பிரபல இயக்குநரை அலையவிட்ட நயன்தாரா?.. ஒரு கோடிக்கு பேசப்பட்ட தனுஷ்பட நடிகை..

Report
102Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடியாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாராவிற்கு பல இயக்குநர்கள் கதை கூறி வருகிறார்களாம்.

நல்ல கதை நல்ல சம்பளம் என்று தேர்வு செய்து நடித்து வரும் நயன் தாராவிடம் சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கதையை கூறியுள்ளார். விளையாட்டு வீரங்கனை ஒருவரின் வாழ்க்கை வரவாற்று படமாக அமைந்த கதையாக இருந்துள்ளது அவர் கூறிய கதை.

இப்படத்தின் கதையை கேட்ட நயன்தாரா நிச்சயமாக பண்ணுவோம் என்று கூறி அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரை கண்டுகொள்ளாமல் மற்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.

இதனால் கடுப்பான இயக்குநர் நந்தா அமைதியாக சென்றுள்ளார். இக்கதை தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் டாப்சி பண்ணுவிற்கு தெரியவந்தது. கதை நன்றாக இருக்கிறதே என்று டாப்சி ஓகே நடிக்கலாம் என்று கூறியுள்ளார். அதை கூறியதோடு தயாரிப்பாளரையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் பெரிய தொகையையும் அவருக்கு கொடுத்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் படமாக்கவுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. நல்ல கதையை நயன்தாரா மிஸ் செய்துள்ளார் என்று இயக்குநர் தரப்பில் பேசப்படுகிறது.