இளம்நடிகையை வளையில் சிக்கவைத்த பிக்பாஸ் ஆரவ்விற்கு திருமணம்! நடிகை ஓவியாவை ஏமாற்றினாரா?

Report
45Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக களவானி உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து படவாய்ப்பில்லாமல் விலகி இருந்தார். பின் 2017ல் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சினிமா கெரியரை முற்றிலும் மாற்றியது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதன்மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தார். பிக்பாஸில் சில சர்ச்சையிலும் சிக்கி மன அழுத்ததால் வெளியேறினார். இதற்கிடையில் பிக்பாஸ் ஆரவுடன் காதல் வளையிலும் சிக்கினார்.

ஒன்றாக வெளியில் செல்வது சுற்றுவதுமாக அவர்களது புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது நாங்கள் நல்ல நண்பர்கள் என்று வெளியில் கூறினாலும் ஓவியா மனதில் காதல் இருந்துதான் வந்துள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஆரவ் வேறொரு நடிகையுடன் காதலில் இருந்துள்ளார் என்று செப்டம்பர் 6ல் விமரிசையாக திருமணம் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது. அப்பெண் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் ராஹி (Raahei).

கொரானா வைரஸ் யாருக்கும் நெருங்காத வண்ணம் திருமணம் நடைபெற்று வருகிறதாம்.

இதனால் ஓவியா தரப்பில் எந்தவொரு பதிலும் இல்லை. காதலித்து பின் ஓவியாவை ஏமாற்றிதாக ரசிகர்கள் ஆரவ்வின் திருமண செய்தியை கேட்டு திட்டி வருகிறார்கள்.