19 வயது சின்னத்திரை நடிகையை டார்ச்சர் செய்யும் சொந்த அப்பா.. வைரலாகும் வீடியோ..

Report
95Shares

கொரானா லாக்டவுனால் சின்னத்திரை வெள்ளித்திரைக்கு தற்போது போதிய கட்டுப்பாட்டுகள் விதித்து அனுமதி வழக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் படப்பிடிப்பிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

தற்போது இந்த லாக்டவுன் பிரபலங்களிடையே மன அழுத்தத்தை உருவாக்கி தற்கொலை வரை செல்ல தூண்டி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் மரணம் சினிமாவையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் கும் கும் பாக்யா என்ற சீரியல் பல ஆண்டுகளாக 1500 எப்பிசோட்டினை தாண்டி ஒளிப்பரப்பாகி தமிழ், இந்தி போன்ற மொழிகளில் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று வருகிறது.

இச்சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் Tripti Shankhdhar. தற்போது 19 வயதான இளம் நடிகை தன் தந்தையால் பல்வேறு டார்ச்சர்களை சந்தித்து வருகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘என் அம்மா, சகோதர், சகோதரிகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார் என்றும், 29 வயதானவருடன் எனக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

தந்தையால் சினிமாவில் அறிமுகமானாலும் அவரால் ஒரேஒரு படம் தான் நடித்தேன் அதன்பின் என் உழைப்பால் நடித்து வருகிறேன் என்று கூறி எனக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து உத்திரபிரதேச போலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதைதொடர்ந்து என் மகள் நன்றாக இருக்கிறார் என்று மற்றொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.