நடிகருடன் எல்லைமீறி நெருக்கமான காட்சிகளில் ஆர்யாவின் முன்னாள் காதலி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
536Shares

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர். அந்தவகையில் வேறொரு மாநிலத்தில் இருந்து வந்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் பிரபலமானவர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் 16 இளம்பெண்கள் போட்டியிட்டு கடைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆசையை உடைக்கும் வண்ணம் ஆர்யா வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

அதில் ஆர்யாவின் பெரும் அன்பையும் தன் சுட்டித்தனத்தால் காதல் வளையில் சிக்கவைத்த பெண் அபர்ணதி. எல்லையற்ற அன்பு வைத்த அபர்ணதி ஆர்யாவின் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளாமல் மேடையிலேயே அழுதவர்.

தற்போது அதையெல்லாம் மறந்து படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அந்தவகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிக்கும் முதல் படத்திலேயே நெருக்கமான காட்சிகளிலும் முத்தக்காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார். அப்படத்தில் பாடல் காட்சி இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்தும் வாழ்த்துகளை கூறியும் வருகிறார்கள்.