திறமையை காட்ட நடுரோட்டில் தல அஜித் செய்த செயல்!!.. இந்த வில்லன் நடிகர்தான் காரணமா?..

Report
16Shares

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். ஆரம்பகால கட்டத்தில் யாருடைய துணையும் இன்றி இந்த நிலைக்கு தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர்.

அவரின் பெருமையை பற்றி அவரை தெரிந்தவர்கள் பலர் பேட்டியில் கூறி வருவார்கள். அந்தவகையில் தல அஜித் பற்றி அறிந்திராத ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய நடிப்பை நிறுபிக்க பிரபல நடிகர் பிரகாஷ்ராஜிடன் நடுரோட்டில் தல அஜித் நடித்து காட்டியுள்ளாராம்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜும் ஒரு காரணமாம். ஆசை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார்.

அப்போது தல பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது தான் நடித்ததற்கு பாராட்டுகள் வரவில்லையாம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜுற்கே பாராட்டுகள் கிடைத்ததாம்.

இதை அவரிடமே சென்று கேட்ட அஜித், நான் நன்றாகத்தானே நடிக்கிறேன் எனக்கு கைத்தட்டல் வராமல் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது என்று கேட்டுள்ளாராம். அதற்கு பிரகாஷ்ராஜ் நான் நடிப்பது வில்லன் கதாபாத்திரம் ரொம்பவும் பவர் ஃபுள்ளானது. அதனால் தான் என்றும் நீயும் வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல நிலைக்கு வருவாய் என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

இதையடுத்து வாலி படத்தில் நடிகர் அஜித் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இதற்கு காரணம் பிரகாஷ்ராஜ் தான் என்று பேட்டியிலும் நடிகர் அஜித் கூறியிருப்பார்.