படவாய்ப்பிற்காக எப்படிபட்ட காட்சிகளிலும் நடிக்க தயார்?.. நடிகையை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்..

Report
1616Shares

பெரும்பாலான நடிகைகள் வயதான பின் தான் சின்னத்திரைக்கு படவாய்ப்பு கிடைக்காமல் நடிக்க செல்வார்கள். ஆனால் தற்போது அது தலைகீழாக மாறி சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு பிரபலமானவர் நடிகை வாணிபோஜன். தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபல தொலைக்காட்சி மூலம் புகழ் பெற்று தற்போது சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வாணி போஜன், வைபவ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் லாக்கப். இந்த படத்தில் ஒரே ஒரு படுக்கையறை காட்சியில் மட்டும்தான் வாணி போஜன் நடித்திருப்பார். அங்கிருந்து தான் படத்தின் கதை ஆரம்பம்.

சமீபகாலமாக பல தயாரிப்பாளர்கள் வாணிபோஜனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சின்னத்திரை நடிகைகள் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சூழலில் தற்போது வாணி போஜன் நடித்த சில திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என மாறி மாறி நடித்து வருகிறார்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சம்பளம் எவ்வளவு என்று கேட்பதிலே குறியாக இருக்கிறாராம் வாணி போஜன். அந்த வகையில் பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற எந்த பாரபட்சமும் இல்லை.

யாருடன் வேண்டுமானாலும் நெருக்கமாக நடிக்க தயார் என அறிக்கை விட்டுள்ளார். இதனை அறிந்த தயாரிப்பாளர்கள் பல படங்களில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்காக போட்டோஹுட்டும் செய்து வருகிறார் வாணி போஜன்.