ஸ்டுடியோவில் நடிகர் திலகத்தை அசிங்கப்படுத்திய பிரபலங்கள்.. ஆறுதல் கூறிய இயக்குநர்!.. வைரலாகும் பல ஆண்டு உண்மை வீடியோ..

Report
120Shares

சினிமாவில் இவரை போன்று நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் பிரபலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐய்யா தான். அனைத்து வித கதாபாத்திரத்திலும் தன்னையே முழுமையாக அர்பணித்தவர் அவர்.

தற்போது அவர் இல்லாவிட்டாலும் அவரது புகழ் சினிமாவில் பேசப்பட்டும் ஆச்சர்யப்பட்டும் வருவது உண்மையே. இந்நிலையில் அவர் கஷ்டப்பட்ட சில அனுபவங்களை கூறி வீடியோ இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அவர் கூறியதில், நான் படத்திற்காக ஸ்டூடியோ சென்றிருந்தேன். அங்கிருந்தவர்கள் என் குரலை பார்த்து மீன் மாதிரி பேசுகிறானே என்று கூறி அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் நான் வெளியில் வந்து அழுதேன்.

இதை பார்த்த இயக்குநர் கிருஷ்ணன் எனக்கு ஆறுதல் கூறி நீ நல்ல நிலைக்கு வந்து உன்னை வேண்டாம் என்று கூறியவர்கள் உன் பக்கத்தில் வந்து நிற்ப்பார்கள் என்று கூறினார். அவர் கூறியது தற்போது உண்மையாகியது என்று பெருமித்ததுடன் கூறியுள்ளார் நடிகர் திலகம்.