மேக்கப் இல்லாமல் வியர்வை சொட்ட சொட்ட 150 யோகா.. புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.

Report
62Shares

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான நடிகைகள் பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் இடத்தில் இடம்பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். நடிகையர் திலகம் எனும் ஒரே படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது, மூலம் இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இதையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வாழ்க்கை வரலாற்று படங்களிலும் நடித்து வருகிறார்.

லாக்டவுன் என்பதால் சினிமாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் படப்பிடிப்புகள் இன்னும் துவங்கவில்ல்லை. அதனால் வீட்டிலேயே இருந்தபடி ஜிம் ஒர்க் அவுட் மற்றும் யோகா போன்றவைகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் உடற்பயிற்சியால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கீர்த்தியா என்று கேள்வி கேட்டும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறி வருகிறார்.

தற்போது 150 சூர்ய நமஸ்காரம் செய்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக 200 சூர்ய நமஸ்காரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்ட்ட அழகான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் மேக்கப் இல்லாமல் வியர்வை சொட்ட சொட்ட இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.