விவாகரத்தாகி பல வருடம் கழித்து மறுமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. இவர்தானா?

Report
71Shares

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடித்த மாயி என்ற படத்தில் வடிவேலுவிற்கு பெண்பார்க்கும் பெண்ணாக நடித்தவர் தீபா. அப்படத்தில் வா மின்னல் என்ற காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.

அதில் இருந்து மின்னல் தீபா என்ற அழைக்கப்பட்டு வந்தார் அந்த நடிகை. அதன்பின் சில படங்களில் நடித்து வந்த தீபா தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் யாரடி நீ மோகனி என்ற சீரியலில் நடித்திருந்த போது சில சர்ச்சையிலும் சிக்கினார். சுரேஷ் என்பவரை கடந்த 2013ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த மின்னல் தீபா இருவருக்கும் சில கசப்பான கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

இதற்கு காரணம் ரகசியமாக ஒருவரை தீபா காதலித்து வந்ததாகவும், படப்பிடிப்பில் அந்த நபர் தீபாவை கண்ணத்தில் அரைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் சில வீடியோக்களையும், ஆடியோகளையும், புகைப்படங்களையும் அந்த நபர் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகவே விவாகரத்து பெற்றுள்ளார் என்று ஊடகத்தில் செய்திகள் பரவின.

இதுதொடர்பாக அந்த நபர் நடிகை தீபாவிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்னல் தீபாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி என்பவருடன் மறுமணம் நடந்துள்ளது.கொரானா நேரத்தில் குறைந்த நபர்கள் உறவினர்கள் மத்தியில் இருவரின் திருமணம் நடைபெற்றது. தற்போது தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.