சமந்தாவை கோடிகளுக்கு பேரம்பேசிய தயாரிப்பாளர்?.. 6 கோடிக்கு நயன்தாராவை பகைத்துக்கொள்ளும் நடிகை!!..

Report
51Shares

சினிமாவில் நடிகர்களை போல் நடிகைகளுக்கும் அவரவர் மார்க்கெட்டிற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் யாருக்கு இவ்வளவு சம்பளம் என்று போட்டியும் நடைபெறும். அந்தவகையில் கோடியில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை நயன் தாரா.

தமிழில் 3முதல் 4 கோடியும் தெலுங்கில் 6 கோடி வாங்கியும் வருகிறார். நயன் தாரா. இதற்கு அடுத்து இருப்பவர் நடிகை சமந்தா. நயன் தாராவை போல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் கனவுகன்னியாகவும் திகழ்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் புதிய படத்திற்காக பேச சென்றுள்ளார். சம்பளம் பற்றி பேசும் போது சமந்தா அப்படத்திற்காக ரூ. 3 கோடி வரை கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் முரண்பாடாக பதில் அளித்து மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனால் சமந்தா ஒரு படத்தில் நயன் தாராவை புக் செய்யும் போது ரூ. 6 கோடிக்கு ஒப்புக்கொள்ளும் நீங்கள் எனக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்க வாக்குவாதம் செய்து மறுக்குறீர்களே என கேட்டுள்ளார். உடனே தயாரிப்பாளர் பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தயாரிப்பாளர், எந்த படம் என்ற உண்மையும் வெளியில் வரவில்லை. இதற்கான காரணம் இருதரப்பில் இருந்தும் உறுதியாக அவர்களே கூறினால் தான் உண்மை தெரியவரும்.