பிரபல சீரியல் நடிகையை அசிங்கப்படுத்திய தொலைக்காட்சி சேனல்!. இந்த நிகழ்ச்சி தான் காரணம்.. ஓப்பன் டாக்

Report
62Shares

தொலைக்காட்சி மூலம் சினிமாவில் பலர் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வயதான பின் தான் வருவது வழக்கம். ஆனால் தற்போது சின்னத்திரையில் நல்ல இடத்தை பெற்று பின் சினிமாவில் பிரபலமாவது தான்.

அந்தவகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் சீரியல் நடிகையாக களமிரங்கியவர் விஜே சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். சில தினங்களுக்கு முன்பு சித்ராவுக்கும் சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை ஷிவானியை வைத்து ஒரு சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில், நீங்கள் ”ஸ்டார் ஜோடிகள்” நிகழ்ச்சியில் வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு சித்ரா, அதில் கலந்துகொள்வதாக தான் இருந்தேன். ஆனால் இடையில் தொலைக்காட்சியில் இருந்து போன் வந்தது.

அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறுவது சரியாக படவில்லை. விரைவில் உங்களுக்கான ஒரு நல்ல தளம் கிடைக்கும். உங்களை நினைத்து பாவமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

இதை கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன் என்று பதிவு செய்து என்னை பார்த்தே எனக்கு பெருமிதமாகவுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.