அழகிய புடவையில் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. கியூட் போட்டோஸ் இதோ..

Report
128Shares

தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்களால் மிகவும் ரசிக்கபட்டு, முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான இது என்ன மாயம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகையர் திலகம் எனும் ஒரே படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது, மூலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக தற்போது கொடிகட்டி பறந்த வருகிறார் நடிகர் கீர்த்தி.

சமீபத்தில் சொலோ ஹீரோயினாக இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் OTT தளத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பெங்குயின்.

இந்நிலையில் நேற்று நடந்த முடிந்த ஓணம் பண்டிகையை தனது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதோ அதற்கான புகைப்படங்கள்..