இயக்குநரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல நடிகை.. திருமணத்திற்கு நோ கூறுவது இதற்குதானா?

Report
131Shares

கொரானா லாகடவுன் தற்போது அனைத்துவித துறையையும் பெரும்பாதிப்பில் தள்ளியுள்ளது. தளர்வுகள் ஆரம்பித்து இயல்பு வாழ்க்கைக்கு மீள சில கட்டுப்பாடுகளோடு அனுமதி அளித்திருக்கும் நிலையில் சினிமா பிரபலங்களுக்கும் மகிழ்ச்சி.

இதைவிட காதலர்களாக சுற்றிவரும் பிரபலங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோடியாக சுற்ற வாய்ப்பு கிட்டியது தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் தளர்வுகள் அளித்த அடுத்த நாளே சுற்றி வருபவர்கள் தான் தமிழ் சினிமாவில் இப்போதைக்கு பிரபல ஜோடியாக வலம் வரும் அந்த முன்னணி ஹீரோயினும் இயக்குனரும்.

சிறிது இடைவெளி கிடைத்தாலும் வெளிநாடு சென்று பொழுதைக் கழிக்கின்றனர். விமானத்தில் செல்லும்போது கல்யாணம் பண்ணிக்கலாமா என இயக்குநர் கேட்டால் நடு வழியில் இறக்கி விட்டிடுவாரோ என பயந்து கொண்டு இயக்குனரும் பேச்சு மூச்சில்லாமல் சென்று வருகிறாராம்.

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா லாக்டவுன் தடையாக அமைந்தது. தற்போது இருவரும் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தனர்.

காரணம் என்னவென்று கேட்டால், கதாநாயகி தான் பைனான்சியராம். இப்போதைக்கு இயக்குனருக்கு படங்கள் இல்லாமல் பாக்கெட்டில் பத்து பைசா கூட கிடையாதாம். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகுதான் படம் இயக்குவது என முடிவெடுத்து இருந்த இயக்குனர் மீண்டும் கல்யாண விஷயத்தை பற்றி அந்த நடிகையிடம் மெல்ல பேச்சுக் கொடுத்துள்ளார்.

இருவரையும் இந்தக் கொரானா சமயம் பிரித்து வைத்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததையொட்டி இருவரும் விமானத்தில் ஜோடியாக பறந்து வருகிறார்கள்.. கல்யாண பேச்சை எடுத்தவுடன் அந்த நடிகைக்கு திடீர் என கோபம் வந்துவிட்டதாம்.

இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் எனவும், அப்படி எனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் திருமணம் நடைபெற்றால் தற்போது எனக்கு இருக்கும் மார்க்கெட் குறைந்து சினிமாவில் இருந்து விலக நேரிடும்.

தானாக திருமணத்திற்கு வந்து சொல்லாத வரையில் இதைப் பற்றி பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். வேண்டுமென்றால் சுத்தும் வரை சுற்றிவிட்டு கிளம்பு எனும் அளவுக்கு இயக்குனரை வெளுத்து வாங்கி விட்டாராம். திருமணத்திற்கு பிறகு அது நடக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கருதி திருமணத்திற்கு தடை போட்டுள்ளாராம்.

ஆனால் நடிகையின் மனதில் உண்மையான கருத்து என்ன இருக்கும் என்று அவரே முடிவெடுத்து இயக்குநரை திருமணம் செய்தால் தான் இந்த கிசுகிசுக்களுக்கு முற்று ஏற்படும். ஆனால் நடிகை வெளியிடும் புகைப்படங்களை பார்த்தார் தன்னுடைய முன்னாள் காதலர்களை வெறுப்பேற்ற இருக்கலாமே என்று ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.