10 வருடங்களாக நயன்தாராவை ஒதுக்கி வைக்கும் நடிகர் தனுஷ்.. பல ஆண்டுகால ரகசியத்திற்கு இதுதான் காரணமா?

Report
2162Shares

தமிழ் சினிமாவில் நடிகர்கள் சினிமாவில் வளர முன்னணி நடிகைகளை தங்கள் படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் சிலரோ தமக்கு உகந்த நடிகை கதாபாத்திரத்திற்கு ஏற்ப இருந்தால் போது என்று இயக்குநர்களிடம் கூறி ஒப்பந்தம் செய்ய கூறுவார்கள்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் குறுகிய அதாவது 18 ஆண்டுகள் உழைப்பில் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். பல சர்ச்சைகள் அவமானங்கள் என்று தான் பட்ட கஷ்டங்களை பல மேடைகளில் கூறியிருக்கிறார் தனுஷ்.

அதேபோல் எந்த நடிகைகளில் வாழ்க்கையில் பிரச்சனை என்றாலும் அது தனுஷ் பேர் அடிபடாமல் இருக்காது. தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பழியை தூக்கி தனுஷ் மீது போட்டு விடுவதும் ஒன்றும் புதிதான விஷயமல்ல.

அவரும் அப்படி இருந்ததாக ஒரு சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அவையெல்லாம் உண்மையா என்பது தெரியாது.

ஆனால் நயன்தாரா வாழ்க்கையில் தனுஷ் தலையிட்டுள்ளார் என்று தற்போது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி தான் தற்போது தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்களிடையே கிசு கிசுவாகவுள்ளது.

நயன்தாரா தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் 2005ல் வெளியான சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார் என்று தான் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அப்படத்திற்கு முன்பே தனுஷ் நடிப்பில் 2004ல் வெளியான சுள்ளான் படத்தில் தான் அறிமுகமாக இருந்ததாம். சுள்ளான் படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக தனிஷுடன் நடிக்க அந்த படத்தின் இயக்குனர் ரமணா முதலில் நயன்தாராவை தான் தேர்வு செய்தாராம்

ஆனால் அப்போது தனுஷ் அந்த விஷயத்தில் தலையிட்டு நயன்தாரா தனக்கு சரியான ஜோடி இல்லை என நிராகரித்து விட்டாராம். பின்னர் காலம் கடந்த பிறகு யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுடன் தனுஷ் நடித்தார். மேலும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நயன் தாரா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். எதிர் நீச்சல் படத்தின் தயாரிப்பாளராக தனுஷ் இருந்தார்.

அதன் பிறகு தனுஷ் நயன்தாரா ஜோடி கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இணையவில்லையாம். இதற்கு காரணம் தனுஷ் தன்னை நிராகரித்தது தான் என்று கூறப்படுகிறது.