பிரபல இயக்குநருக்கு ஹிப்ஹாப் ஆதி செய்த துரோகம்.. அடித்து துறத்தும் நிலைக்கு இதுதான் காரணமா?

Report
40Shares

சினிமாவில் பெரும்பாலும் சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களின் தயவு இருந்தால் பிரபலங்களாகி விடலாம் என்று நினைப்பார்கள். அப்படி வாய்ப்பு கிடைத்து பெரிய இடத்திற்கும் வந்துவிடுவார்கள்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் சிலர் ஒரு சிலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பெரிய ஆளாக்கி விட்டு பின்னர் அடித்துக்கொள்ளும் சம்பவம் தற்போது சகஜமாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தன்னால் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது உயரத்திற்கு சென்றவர்கள் தான் இப்படியும் நடந்து கொள்கிறார்கள். அண்ணன் தம்பி என கட்டி கொண்ட சுந்தர் சி மற்றும் ஹிப்ஹாப் தமிழா இடையே பிரச்சினை ஒன்று வெளியாகி இருவரையும் பிரித்து வைத்து விட்டதாம்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இண்டிபெண்டன்ட் இசையமைப்பாளர் என சொல்லிக் கொள்வார். இதனை பார்த்த சுந்தர் சி சரி ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம் என சென்றாராம்.

அப்பவே மொத்த படமும் எனக்கு கொடுத்தால் தான் பண்ணுவேன் என சுந்தர் சி இடம் கேட்டதாக அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார். முதலில் எதார்த்தமாக தெரிவித்த சுந்தர் சி அதுவே தனக்கு பிரச்சனையாக அமையும் என தெரியாமல் மேடையிலேயே கூறிவிட்டார்.

தம்பி என்ற பாசத்தில் தன்னுடைய சொந்த காசை போட்டு அரண்மனை, அரண்மனை 2, மீசைய முறுக்கு, நான் சிரித்தால், ஆம்பள, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களில் சுந்தர் சியின் இயக்கத்திலும் தயாரிப்புலும் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைக்கச்செய்து வளர்த்து விட்டார். இப்படங்களில் கடைசியாக வந்த படங்கள் ஓரள்வில் மட்டுமே பாக்ஸ் ஆப்பிஸில் பணத்தை எடுக்க முடிந்தது.

ஆனால் அப்போது சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் பந்தா காட்டி பல லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாராம் ஹிப்ஹாப் ஆதி.

இதனால் கடுப்பான சுந்தர் சி படம் வெளியானதும் பார்த்துக்கொள்ளலாம் என இருந்த நிலையில் அவருக்கு தகுந்த மாதிரி அந்த படமும் மண்ணைக் கவ்வியது. உடனடியாக ஹிப்ஹாப் தமிழா உடனான உறவை முறித்துக்கொண்டார் சுந்தர் சி.

சுந்தர் சி படம் எடுத்தால் ஹிப் ஹாப் தமிழா ஆதி தான் இசையமைப்பார் என சமீப காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது அரண்மனை 3 படத்திற்கு சத்யா என்ற இசையமைப்பாளர் தான் இசையமைக்க உள்ளாராம்.

இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.