நடிகையை ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்ற நடிகருக்கு பிக்பாஸ் தேவையா?..கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

கொரானா லாக்டவுனால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துவங்க காலதாமதம் ஆனது. பிக்பாஸ் எப்போது என்று நினைத்து கொண்டிருக்கும் நேரத்தில் லாக்டவுன் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் திடீரெனெ பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டது
மேலும் தினசரி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரை பற்றி வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போது தெலுங்கில் ஏற்கனவே பிக் பாஸ் தொடங்கிவிட்டது. நடிகர் நாகர்ஜுனன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இனி வரும் நாட்களில் சுவா ரஸியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகிய இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.
இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும் தனக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.