மரணம் இப்படியெல்லாம் வருமா.. மரணமடைந்த வடிவேலு பாலாஜி பற்றி ரோபோ சங்கரின் வீடியோ..

Report
49Shares

பிரபல தொலைக்காட்சியில், கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. சமீப காலமாக இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பட வாய்ப்புகளும் கிடைத்தது.

மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் கிடைத்து, சின்னத்திரை தாண்டி வெள்ளி திரை காமெடி நடிகராக வளைந்து வந்த நேரத்தில் மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி 45 வயதில் மரணம் அடைந்தார்.

ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவரது மறைவு குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கிட்ட தட்ட 19 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த கலைஞர், நண்பர் வடிவேலு பாலாஜி பற்றி நடிகர் ரோபோ சங்கர் மிகவும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது... “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன் வடிவேலு பாலாஜி. சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞருக்கு, மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி மற்றும் நண்பர்கள் சென்று நலம் விசாரித்து, விரைவில் திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று.

இப்படி படம் பொறுக்காமல் வேதனையுடன் பேசி, கடைசியில் வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார் ரோபோ ஷங்கர்.