போதைபொருளுக்கு அடிமையான பிரபல நடிகைகள்!. நடிகரின் தற்கொலை விசாரணையில் உண்மையை உளறிய காதலி

Report
801Shares

இந்தியாவை பெரும் அதிர்ச்சியில் ஆட்டிய விஷயமாக இன்னும் பேசப்பட்டு வருவது சுஷாந்த் சிங் தற்கொலை. இதுகுறித்து பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் சினிமா தாண்டி அரசியலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

அவர் கொலை செய்யபட்டுள்ளார் என்று வாதம் செய்கிறார்கள் சுஷாந்த் சிங்கின் நலம் விரும்பிகள். இதனை தொடர்ந்து, அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதலே எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று சொல்லி வந்த அவர் தற்போது தனக்கு அந்த பழக்கம் உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது நடிகை ராகுல் பரீத் சிங் போதை பொருள் பயன்படுத்தியாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், முன்னணி நடிகை ராகுல் பரீத் சிங் மற்றும் சாரா அலி கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சைமன் கம்பட்டா ஆகியோருக்கும் இந்த போதை பொருள் விவகாரத்தில் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்.

இதனால், NCB என்று சொல்லக்கூடிய தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் பார்வை இவர்கள் மீது திரும்பியுள்ளது. முறையான நடவடிக்கைகள் மூலம் ராகுல் பரீத் சிங் உட்பட மூவரையும் கைது செய்து விசாரணை செய்ய NCB முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இவர்களுக்கு சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறுகிறார்கள். இது, ராகுல் பரீத் சிங்கின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.