
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே சிறந்த முறையில் பேரு எடுத்து வந்தார். பின்பு விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் ஜூலி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி செய்த சில தவறான காரியங்களால் மக்களிடையே வெறும் வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்றாலே போலி என்ற நிலையை உறுவாக்கி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜூலி ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், பின்பு விளம்பரப் புகைப்படங்கள் என பிஸியாக மாறி வந்தார் ஜூலி. கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். சில மரணங்கள் கூட நிகழ்ந்துள்ளது. black lives matter என பலரும் உலகளவில் கோஷம் போட்டு வருகின்றனர்.
இதனை மையப்படுத்தி வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் ஜூலி. கருப்பு இனத்தவரை ஆதரிக்கும் வண்ணம் கருப்பு நிற மேக்கப் போட்டு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.
இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஜூலியின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். ஆனால் எப்பொழுதும் போல விதண்டாவாதம் பேசும் சிலர். “ஏன்மா கீழ்த்தட்டு மக்கள் பற்றி பேச மாட்டியா? கறுப்பர்கள் தான் முக்கியமா ? ” எனவும் கேள்வி கேட்கின்றனர்.