இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் மீது விழுந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ்

Report
99Shares

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர்.

இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம், கடைசியாக விக்ரமின் கோப்ரா படத்தில் இவர் இசையமைத்திருந்த பாடல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இவர் செல்போன் நிறுவனத்திற்காக இசையமைப்பு பணிக்காக இவர் பெற்ற ரூ. 3.47கோடி ஊதியத்திற்கு வரி செலுத்தவில்லை என்பதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.