
பல நடிகைகள் சினிமாவில் ஒரு படத்தில் நடித்தும் மற்ற படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடுகிறார்கள். அந்த நிலையில் செல்லாமல் சில நடிகைகள் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் தமிழில் அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அதன்பின் விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
சில தமிழ் படங்களில் நடித்த கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கன்னட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து பிரியங்கா திரிவேதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் பிரியங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வருகிறது. வெங்கடேஷ் இயக்கத்தின், தமன் இசையில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ள நிலையில் சமகால நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி.
தற்போது சினிமாவில் நிலைக்க வேண்டி உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களிடையே ராஜா பட பிரியாவா இது என்று கதாபாத்த்திர பெயர் கொண்டு ஷாக்காகி வருகிறார்கள்.