விஜய் முதல்வன் படத்தை தவரவிட அவர் அப்பா தான் காரணமா? வில்லங்கம் கூடவே இருக்கு என கவலைப்பட்ட தளபதி...

Report
39Shares

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராகும் நிலைக்கு ரஜினிக்கு அடுத்தப்படியாக திகழ்ந்து வருபவராக இருப்பவர் விஜய் அந்த வகையில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு கவர்ந்து வருகிறார்.

இதே போல் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர் அவருடன் நண்பன் பட இயக்கத்தில் நடித்திருந்தாலும் 1999ல் நடிகர் அர்ஜூன் நடித்த சூப்பர் ஹிட் படமான முதல்வன் படத்தை தவறவிட்டார்.

இப்படத்தை விஜய் நடிக்காமல் போக பல காரணங்கள் சொல்லப் பட்ட நிலையில், முதலில் ரஜினிக்காக எழுதிய இந்த கதையில் அவர் நடிக்க மறுக்க பின்னர் இதே கதை தளபதி விஜய்க்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அங்குதான் விதி விளையாடி உள்ளது. தளபதி விஜய்க்கு பதிலாக அந்த கதையை அவரது தந்தை சந்திரசேகர் கேட்டுள்ளார். அதேபோல் சந்திரசேகரிடம் அந்த கதையை சங்கர் கூறாமல் அவரது உதவி இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

சந்திரசேகருக்கும் அந்த உதவி இயக்குனருக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்த நிலையில் இந்த கதையைக் கேட்டும் கேட்காமல் நிராகரித்து விட்டாராம் சந்திரசேகர். பின்னர் அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. இந்த தகவலை சங்கர் சமீபத்தில் கூறினார்.

ஏற்கனவே தனது மகனை முதல்வராகி பார்க்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் சந்திரசேகர் அந்த படத்தை தவற விட்டதால் மிகவும் வருத்தப்பட்டாராம். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் கதை தளபதி விஜய்யிடம் முழுமையாக சொல்லப்படவில்லை என்கிறார்கள்.

ஒருவேளை இந்த கதையை தளபதி விஜய் நேரடியாக கேட்க சங்கர் நேரடியாக கூறியிருந்தால் இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி சரித்திர சாதனை படைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது சமீபத்தில் பேட்டியில் முதல்வன் 2 இயக்கப் போவதாகவும் அதில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இயக்குனர் சங்கர் கூறியுள்ளார்.

அப்படத்தில் விஜய் நடித்திருந்தால் சூப்பர் ஸ்டாராகவும் தற்போது முதல்வராகவும் ஆகியிருப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.