20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்!!.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்?..

Report
2925Shares

பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் படிப்பினை விடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வருவார்கள் அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி அதன்பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என சில படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து பிரியசக்தி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் கலக்கி கொண்டு வந்தார்.

இதையடுத்து குடும்பத்தாரின் விருப்பத்தினால சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தற்போது நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம்.

அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.

ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர்.

அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.

தற்போது நடிகை நீலிமா ராணிக்கு திருமணமாகவில்லை என்றும் அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பார்த்து சைட் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.