இப்படி யாரும் சூப்பர் மாடலை வெளிப்படையாக கலாய்த்ததில்லை!.. வைரலாகும் பிக்பாஸ் சம்யுக்தா வீடியோ

Report
16Shares

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4 மூலம் டிஆர்பியை ஏற்ற ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் மூன்று நாட்கள் நிறைவு பெற்றநிலையில் போட்டியாளர்களிடையே சில பிரச்சனைகள் ஆரம்பித்து வருகிறது.

இதையடுத்து எமோஷனல் டாக் என்ற டாஸ்க்கினை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வழங்கியிருந்தார். அனைவரும் பேசிவரும் நிலையில் மூன்றாம் நாள் மாடல் சம்யுக்தா பேசியுள்ளார்.

அதில், நானும் பல வருடங்களாக மாடலிங் துறையில் இருக்கிறேன், ஆனால் எப்போதும் சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டதில்லை. என்று கூறியது விழுந்து சிரித்தனர் மற்ற போட்டியாளர்கள்.

இருங்கய்யா என்று கூறி, டாக்டர் எப்போதும் சூப்பர் டாக்டர் என சொல்வதில்லை, என்ஜினீயர் எப்போது சூப்பர் என்ஜினியர் என சொல்வதில்லை, ஆனால் மாடல் மட்டும் எப்படி சூப்பர் மாடல் என கூற முடியும் என்று கூறி முடித்துள்ளார்.

இப்படி கூறியது வெளிப்படையாக மீராமிதுனை தான் சம்யுக்தா கலாய்க்கிறார் என்று பார்க்கும் போதே தெரியவருகிறது. தற்போது மீராமிதுன் அவரது இன்ஸ்டாகிராம் பதிவினை பிரைவேட்டில் வைத்துள்ளார்.

ஆனால் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் இதைவைத்து மீராமிதுன் இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

View this post on Instagram

🤣🤣🤣🤣

A post shared by Bigg Boss Memes (@biggbossmemes.in) on