மொட்ட பாஸ் ஆரம்பிச்ச அடுத்த பிரச்சனை.. சரமாரியாக கொளுத்திப் போடும் பிக்பாஸ்! வைரல் இமேஜ்

Report
6Shares

16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் ஏற்ற வேலை பிரித்தும் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி பேசியவிதம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

சமையல் செய்யும் குழுவில் நடிகை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் செட்டி மற்றும் அனிதா சம்பத் என நான்கு பேர் இருந்தனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பத்திற்கும் இடையே எச்சி பிரச்சனையால் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இன்றுவரை முடிந்தபாடில்லை.

இந்நிலையில் இந்த சண்டை நேற்று அதிகமானதால் குக்கிங் டீமிலிருந்து தான் விலகி விடுவதாக சுரேஷ் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இதை மற்ற போட்டியாளர்கள் ஏற்க மறுத்தனர்.

இதை தொடர்ந்து கோபமாக கார்டன் ஏரியாவுக்கு சென்ற சுரேஷ், நான் பாத்ரூம் சுத்தமா கிளீன் பண்ணுவேன், என்று சற்று ஆவேசமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லும் போது, மற்ற போட்டியாளர்களிடம், உப்பு போட்டு சோறு திங்கற எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என்று கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இப்படி சென்றால் தான் நிகழ்ச்சி ஸ்வரஷ்யமாக செல்லும் என்றும் ரசிகர்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.