ரம்யா பாண்டியனை ஏமாற்றி இயக்குநர் இவரா?. இதுதான் காரணமாம்!

Report
347Shares

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் படவாய்ப்புகள் கிடைக்காமல் போட்டோஹுட்டில் இறங்கி பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையடுத்து குக் வித் கோமாளி, கலக்கபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்களிப்பு கொடுத்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கி விட்டுள்ளது விஜய் டிவி. ஆரம்பம் முதலே ரம்யா பாண்டியனுக்கு அதிக அளவில் சொம்படித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சு.

இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரை நம்பி ஏமாந்து விட்டதாக ரம்யா பாண்டியன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது யார் என்று பலர் கணிக்க துவங்கிய நிலையில், அனேகமாக அது பாலாஜி சக்திவேல் என்பவர் ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள். காரணம் ரம்யா பாண்டியன் முதன்முதலில் அறிமுகமாக இருந்த ரா ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கியவர் அவர்தான்.

ஒரு நாள் மட்டும் ரம்யா பாண்டியனை நடிக்க வைத்து விட்டு பின்னர் நாயகியை மாற்றி விட்டார்களாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஐயோ பாவம் என கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.