ஒரு படவாய்ப்பு கிடைத்ததும் தனுஷாக ஆசைப்படும் KPY தீனா!.. வைரலாகும் புகைப்படம்..

Report
48Shares

பல கஷ்டங்களை தாண்டி முன்னணி நடிகர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருபவர் நடிகர் தனிஷ். என்னதான் மாமனார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன் உழைப்பில் முன்னேறிய நடிகர் தனுஷ். தற்போது நடிப்பு, தயாரிப்பு பாலிவுட் படங்கள் என பிஸி மேனாகா இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் நடித்து, தயாரித்து வெளிவந்த படம் பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலின் மூலம் அறிமுகமானார். பின்னர் தும்பா படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்தார். கார்த்தியின் கைதி இவருக்கு நல்ல பிரேக் த்ரூ கிடைத்தது. காமாட்சி கேட்டரிங் நல்ல ரீச் ஆனது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் கட்டப்பாவினே ரித்விக் ரோஷன் படத்தை தனுஷ் தயாரிக்க ஹீரோவாக தீனா நடிக்கவுள்ளார் என முன்பே சொல்லப்பட்டது.

அஜித் From அருப்புக்கோட்டை என பெயர் வைக்கப்பட்ட இப்படம் இன்னமும் டேக் ஆப் ஆகவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹிட் ரோல்களான ஆடுகளம் கருப்பு, அசுரன் சிவசாமி போல கெட் அப் மாற்றி போட்டோ எடுத்துள்ளார் தீனா.

வேஷம் கட்டாமலே சிறு வயது தனுஷ் போல தான் இருப்பார். இந்த போடோஸில் மனிதர் தனுஷை உரித்து வைத்துள்ளார் என்பதே நிஜம். நேற்றில் இருந்து இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.