சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த சிம்பு பட நடிகை!.. இதுதான் காரணம்!

Report
76Shares

தமிழ் சினிமாவில் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சனா கான். இதையடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் போதிய படவாய்ப்புகள் அமையாமல் இந்தி பக்கம் திரும்பினார்.

மேலும் இவர் நடித்த படங்களில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்புத் திறமையாலும், கவர்ச்சியாலும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஓர் இடத்தை பிடித்தார். கடைசியாக தமிழில் அயோக்கியா படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

சில மாதங்களாக தன்னை காதலித்தவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறி அழுது வீடியோவை வெளியிட்டார். இச்செய்தி சினிமா வட்டாரத்தில் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது திடீரென திரையுலகில் இருந்து விலகப் போவதாக சனா கான் அறிவித்துள்ளார்.

நான் பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் பணியாற்றி நல்ல பேரும் புகழும் மரியாதையும் பெற்றுவிட்டேன். இனிமேல் மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்ற போவதாகவும், எனவே தான் திரையுலகில் இருந்து விலகுவதாக முடிவு செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் சனா இனிமேல் சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளைத் தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

இந்நிலையில் திரையுலகிலிருந்து சனாகான் திடீரென விலகுவதாக வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சனா கான் நடிப்பில் டோம் டிக் அண்ட் ஹரி 2 என்ற ஹிந்தி படம் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.